ethiri.com

ஜோதிர் ஆதித்யா நாக்கை துண்டிப்பேன்: ம.பி. பா.ஜ.க. தலைவர் மிரட்டல்

மத்தியபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் அங்குள்ள கொலாகர் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த இரு தேர்தல்களையும் முன்னிட்டு காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ethiri.com

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜோதிர் ஆதித்யா சிந்தியா மத்திய பிரதேசத்தில் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

தனது பிரசாரத்தில் அவர் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும், கிரார் தகாதத் சமூக அமைப்பின் தலைவருமான ராதே சியாம் தகாதத், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கடும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

இடைத்தேர்தல் நடைபெறும் கொலாகர் தொகுதியில் உள்ள சிவபுரியில் கிரார் தகாதத் சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது. இதில், ராதே சியாம் தகாதத் கலந்து கொண்டு பேசினார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் கிரார் தகாதத் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த கூட்டத்தில் சிவராஜ்சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங்கும் கலந்து கொண்டார். கூட்டத்தில் ராதே சியாம் தகாதத் பேசும் போது, முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை ஜோதிர் ஆதித்யா தொடர்ந்து மோசமாக விமர்சித்து வருகிறார்.

இனியும் இதேபோல் அவர் சிவராஜ்சிங் சவுகானை கைநீட்டி பேசினால் அவரது கையை உடைப்பேன். அதற்கு மேலும் அவர் பேசினால் நாக்கை துண்டிப்பேன் என்று கூறினார்.

அவருடைய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக ராதே சியாம் தகாதத்திடம் கேட்ட போது, ஜோதிர் ஆதித்யா முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை மோசமாக சித்தரித்து பேசுகிறார். அவரை கொலைகாரர் என்றும், கவுரவர்கள் கூட்ட தலைவர் என்றும் விமர்சிக்கிறார். சிவராஜ்சிங் சவுகானை மட்டும் அல்ல, அவர் சார்ந்த கிரார் தகாதத் ஜாதியையும் விமர்சித்து பேசுகிறார். எனவேதான் நான் இவ்வளவு கடுமையாக பேசினேன்.

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதை திரும்ப பெற மாட்டேன். மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று கூறினார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post