ethiri.com

சமாஜ்வாடி கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ராஜ்பகதூர் யாதவ் வாக்கிங் செல்லும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை
லக்னோ:

ethiri.com

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ராஜ்பகதூர் யாதவ் வாக்கிங் செல்லும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கர் மாவட்டத்தின் அட்ராவ்லியா பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரி செல்லும் வழியில் உள்ள கால்வாயில் ஒரு உடல் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ராஜ்பகதூர் யாதவ் என்பதும், காலையில் வாக்கிங் சென்றபோது அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்ததும், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நடந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post