ethiri.com

தூக்கில் போடுவதற்கு பதிலாக மரண தண்டனைக்கு மாற்றுவழியா?

மரண தண்டனை வழங்குவது குறித்து விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் 4 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

தூக்கில் போடுவதற்கு பதிலாக மரண தண்டனைக்கு மாற்றுவழியா?: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்
புதுடெல்லி:

ethiri.com

இந்தியாவில் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறவர்களுக்கு, தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 354 (5) வழி வகுத்துள்ளது.

ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த ரிஷி மல்கோத்ரா என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த வழக்கில் அவர், “மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது விரைவாகவும், முடிந்தவரையில் எளிமையானதாகவும், கைதிகளுக்கு பயம் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “உடனடியாக உணர்வற்ற நிலைக்கு கொண்டு சென்று மிக விரைவாக மரணம் நேரிட வேண்டும்” என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏம்.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரணைக்கு ஏற்றது.

அப்போது மற்ற நாடுகளில் மரண தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை மத்திய அரசின் மூலம் நீதிபதிகள் அறிந்து கொள்ள விரும்பினர்.

இது தொடர்பாக விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் 4 வார காலம் அவகாசம் வழங்கினர். அதுவரையில் அந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மத்திய அரசு பதில் அளித்தபின்னர், தூக்கில் போடுவதற்கு பதிலாக பிற வழியில் மரண தண்டனை நிறைவேற்ற வழிபிறக்குமா என தெரிய வரும்.  

Related Post