ethiri.com
ஒரு ரூபாய் தர்மத்தை ஏற்றுக்கொள்ள பிச்சைக்காரர்கள் மறுப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை தர்மமாக பெற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். நாணயம் சிறியதாக இருப்பதால் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதே போல் 50 பைசா அளவில் இருக்கும் சிறிய ஒரு ரூபாய் நாணயத்தை தடை செய்ய வேண்டும் என பிச்சைக்காரர்களில் ஒருவர் கூறினார்.
ethiri.com
கடைக்காரர்கள் மற்றும் ரிக்ஷாக்காரர்கள் சிறிய ஒரு ரூபாய் நாணயத்தை தங்களிடமிருந்து பெற மறுப்பதால் அதனை தர்மமாக பெறக்கூடாது என முடிவு எடுத்துள்ளதாக அம்மாவட்ட பிச்சைக்காரர்கள் தெரிவித்தனர்