ethiri.com

தமிழனின்_புனிதபூமியை_புத்தபூமி_ஆக்குவதற்கான_அடிக்கல்_நாட்டப்பட்டுள்ளதா?

யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ethiri.com

அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார், தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், தேரரின் பூதவுடலை தகனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நாக விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதற்கு தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று(22) பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

மனுவில் பிரதிவாதிகளாக யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மற்றும் யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி ஆகியோரையும் பிற்பகல் 2 மணிக்கு மன்றில் முன்னிலையாக கட்டளையிடப்பட்டது. இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இந்த மனு இன்று(22) காலை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார், தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், தேரரின் பூதவுடலை தகனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் கடந்த 19ம் திகதி இயற்கை எய்தினாா்.

நிழல்நி ருபர் – ஈழத்து மறவன்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post