ethiri.com

200 வருட பழமையான சிவலிங்கம் ஆலயத்தில் பிரதிஷ்டை

புசல்லாவ டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவலிங்கம் ஒன்று (நாகலிங்கம்) 15.12.2017 கண்டு எடுக்கப்பட்டது. தற்போது கண்டு எடுக்கபட்ட இடத்தில் லிங்கத்திற்கு 02 நாட்கள் தொடர்ந்து வைத்து பூஜைகள் நடைபெற்று தோட்டத்தில் தற்போது புதிதாக கட்டபட்டு வரும் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஊர்வலமாக சப்பரத்தில் கொண்டு செல்லபட்டு வைக்கபட்டள்ளது. தொடர்ந்து லிங்கத்திற்கு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது
இச் சிலை கண்டு எடுப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பெருந்தோட்ட மக்கள் மார்கழி மாதம் திருவெம்பாவையை முன்னிட்டு மார்கழி ஒன்று முதல் தை ஒன்று வரை இராமர் பஜனை பாடுவதும் வழக்கம் அதற்கு மார்கழி முதலாம் நாள் கம்பம் பாலித்தல் நடைபெரும். கம்பம் பாலித்தல் என்பது தொடர்ந்து 30 நாட்கள் பஜனை குழுவினர் வீடு வீடாக செல்லும் போது தூக்கி செல்லப்படும் திரிசூலம் வடிவிலான கம்பத்தை தூக்கி செல்பவரை நியமிப்பதாகும். கம்பத்தை தூக்குபவர் பொது மக்களினால் இரகசியமாக வைக்கப்படும் ஒரு தெய்வீக பொருளை சுவாமி ஆடி அருளினால்; வைக்கப்பட்டிருக்கும் அந்த தெய்வீக பொருளை கூறுவதை குறிக்கும். அவ்வாறு கூறியவரே அந்த கம்பத்தை தூக்கி செல்வார். அந்த நிகழ்வு தோட்டத்தின் பஜனை ஆசிரியர் அ.பெரியசாமி தலைமையில் பிரதேச இராமர் ஆலயத்தில் நடைபெற்ற போது ஆருடன் கொண்ட எஸ்.ரசிண்டன் என்பவரினால் இரவு வேலையில் தான் ஒரு அதிசயத்தை காட்டவுள்ளதாக கூறி ஆலயத்தின் அருகில் இருக்கும் பாரிய பாலத்திற்கு கீழ் சென்று குறித்த சிவ நாகலிங்கத்தை மீட்டெடுத்து வந்துள்ளார். இந்த சிலை 05 தலை நாகபாம்பு சிவனுக்கு குடைபிடிக்கும் தோற்றத்தில் காணப்படுகின்றது. சிலை காணப்பட்ட இடத்தில் பலமை வாய்ந்த நாக பாம்பு ஒன்றும் தற்போது குடி கொண்டுள்ளது. பாம்பு இருக்கும் குகைக்குல் மாணிக்க கற்கள் இருப்பது போன்ற வெளிச்சங்களும் காணப்படுகின்றது. இதனை பார்வையிடுவதற்காகவும் சிலையை (நாகலிங்கம்) பார்வையிடுவதற்காகவும் வணங்குவதற்காகவும் பெருந்திரலான மக்கள் இப்பிரதேசத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்ய இந்தியாவிலிருந்து வந்தவர்களினால் இந்த இடத்தில் சிவனை (நாகலிங்கம்) வைத்து வணங்கப்பட்டிருக்கலாம் என என்னத்தோன்றுகின்றது.
ஆரூடத்தினால் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிலை வைக்கப்படடிருந்த பீடம் ஒன்றும் காண்படுகின்றது. இந்த சிவனாலயம் காணப்பட்ட இடத்தில் பாரிய பாலம் ஒன்று ஆங்கியேர்களினால் நிர்மானிக்கப்பட்டுள்ளது இந்த பாலம் ஆலயம் காணப்பட்ட கற்பாறையின் மேல் பகுதியுடன் தொடர்பு பட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பாலம் அமைக்கப்பட்டதினால் மக்களால் இந்த ஆலயம் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
அதே வேலை ஆற்றில் காணப்படும் பெரும்பாலான கற்கள் சிவலிங்க வடிவிலேயே காணப்படுகின்றன. இந்த ஆற்றுப்பகுதியில் இவ்வாறு சிவலிங்கம் காணப்படுவதினால் என்னவோ இந்த சிவலிங்கம் இங்கு வைத்து பெருந்தோட்ட மக்களால் வழிபட்டிருக்கலாம் எனவும் என்னத்தோன்றகிறது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post