ethiri.com

தொழுதுகொள்

மனிதா மரணத்தை பற்றி கவலைப்படாதே.
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை.
அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை.
நீ சிரித்துப்பார் உன் முகம் உனக்குப்பிடிக்கும்.
மற்றவர்களை சிரிக்கவைத்துப்பார் உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட
உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்
வளர்ந்த பின் வளைவது பெறுமை. வளைந்தே இருப்பது சிறுமை.
விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம் கிடைப்பதில்லை.
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு விடப்போவதில்லை.
இருக்கும் வரை மனிதா நீ மகிழ்ச்சியாக இரு.
1*நண்பர்கள் உங்கள் தவறு தெளிவாகக் காட்டும் கண்ணாடியைப் போல இருக்க வேண்டும்
2*நீங்கள் விரும்பும் வழியில் செல்லுங்கள், ஆனால் அது கடவுளின் வழியில் இருக்க வேண்டும்
3*வாழ்க்கை ஒரு ஐஸ்கிரீம் போன்றது அது கரைவதற்கு முன் நாம் அதை அனுபவிக்க வேண்டும்

ethiri.com

பாத்திமா ஹனா நஜீப் கான்
மஹமூத் மகளிர் கல்லுரி
கல்முனை  

Related Post