ethiri.com

வெண்டைக்காய் மசாலா

தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை பார்க்கலாம்.

அருமையான ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா
தேவையான பொருட்கள் :

ethiri.com

வெண்டைக்காய் – 100 கிராம்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கடலை மாவு – ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

மசாலா செய்வதற்கு :

வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
[பாட்டி மசாலா] கரம் மசாலா – 2 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – அலங்கரிக்க தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை :

வெண்டைக்காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்தூள், அரிசி மாவு, கடலைமாவு, சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த வெண்டைக்காயை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதம் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும்.

அனைத்து நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் பொறித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியில் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.

Related Post