ethiri.com

ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: திருமாவளவன் பேச்சு…………………….

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2½ ஆண்டுகள் இருந்தாலும் தமிழக அரசியலில் கூட்டணி காட்சிகள் மாறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமடைந்து வருகின்றன.

அதற்கு காரணம் மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமைதான்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தி.மு.க. நடத்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். இதனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் இடம் பெறுவாரா? என்ற கேள்வி பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. விழாவை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பம் வருமா என்று எதிர்பார்க்கும்போது இந்த தலைவர்கள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரே மேடையில் இருந்தது புதிய கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவர்களின் பேச்சும் அமைந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

இந்த மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டது ஒரு தொடக்கம். மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்பதில் ஒன்று பட்டு இருக்கிறோம்.

தேர்தலுக்கு இன்னும் 2½ ஆண்டுகள் இருக்கின்றன. இது தேர்தல் கூட்டணி அல்ல. ஆனால் மக்கள் கூட்டணி. மக்கள் பிரச்சினைகளுக்காக ஒரே களத்தில் நின்று போராடுவோம். நமது நட்பு தொடர வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கும் வாசலை திறந்துள்ளார் மோடி.

மோடியின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி வலிமை பெற வேண்டும் என்றார்.

விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, சட்ட சபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜய தாரணி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன், மாநில பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், துணைத் தலைவர் வசந்த குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நாசேராஜேஷ், வேளச்சேரி ராஜ்குமார், அளவூர் நாகராஜன், வீரபாண்டியன், வேளச்சேரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இரா.மனோகர் நன்றி கூறினார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post