ethiri.com

பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமி

உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தில் 5-ம் வகுப்பு மாணவன் சக பள்ளியை சேர்ந்த 7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.: பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமி மானபங்கம்
லக்னோ:

ethiri.com

உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7 வயது சிறுமி 2-வது வகுப்பு படிக்கிறாள். அவளை அதே பள்ளியில் படிக்கும் 5-வது வகுப்பு மாணவன் ஒருவன் மானபங்கம் செய்ததாக ஷாகியாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதில், கழிவறையில் வைத்து தனது மகளை மாணவன் மானபங்கம் செய்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த 1-ந் தேதி நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு துவாரகா பள்ளியில் 4 வயது சிறுமி உடன் படிக்கும் மாணவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post