( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

ஓடும் ரெயிலில் பெண் கற்பழிப்பு-வேடிக்கை பார்த்த மக்கள் ……………………………

பீகார் மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் பீகாரில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் வந்தார். டெல்லியில் நடந்த உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் தனியாக பயணம் செய்தார். பெண்கள் பெட்டியில் அமர்ந்து இருந்தார்.

அதிகாலை நேரத்தில் ரெயில் டெல்லி அருகே வந்தது. அப்போது ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த பெட்டியில் இருந்த பெண் பயணிகள் இறங்கினார்கள். அவருடன் சேர்த்து 5 பெண்கள் மட்டுமே அந்த பெட்டியில் இருந்தனர்.

டெல்லி புறநகர் பகுதியான சக்தரா என்ற இடத்தில் மற்ற 4 பெண்களும் இறங்கி விட்டனர். இவர் மட்டும் தனியாக இருந்தார். ரெயில் அங்கிருந்து புறப்படும் போது, 3 ஆண்கள் திடீரென அந்த பெட்டிக்குள் ஏறினார்கள். அவர்களில் இருவர் அந்த பெண் வைத்திருந்த பைகளை பறித்து சென்று கீழே இறங்கி ஓடி விட்டனர்.

ஆனால், ஒருவன் மட்டும் அங்கேயே இருந்தான் அவன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தான். இதற்குள் ரெயில் பழைய டெல்லி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு 2 போலீசார் பெண்கள் பெட்டியில் ஏறி சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் பெண்ணை பலாத்காரம் செய்தபடி இருந்தார். உடனே போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.

அவனது பெயர் ஷாபாஷ் (வயது 25). டெல்லியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. போலீசார் தாக்கியதில் அவனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்ணையும், வாலிபரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post