ethiri.com

பிரித்தானியாவில் 21 தியாகிகள் கல்லறையில் மாவீரர் சிறப்பு நிகழ்வு!photo

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள “ஈகப்பேரொளி” முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர் நாளான இன்று காலை 9;00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு துயிலுமில்ல பாடல் இசைக்க பொதுச்சுடரேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

ethiri.com

பிரதான சுடரை மாவீரர் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார். நினைவுக் கல்லறைக்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் மக்கள் வரிசைக்கிரமமாக சென்று விளக்கேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து மாவீரர்களை நினைந்துருகும் கவிதையை திரு.வேணூகோபால ஆசிரியர் அவர்கள் வழங்கியிருந்தார்.

இன்றைய தினம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி இக் கல்லறை வணக்க நிகழ்வு காலை 9;00 மணி முதல் 10:00 மணிவரையான ஒரு மணித்தியாலங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

தாயகத்தில் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் திட்டமிட்டவகையில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு தமிழர் தாயகம் சூறையாடப்பட்டு சுடுகாடாக மாறிக்கொண்டிருந்த வேளையில் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும், எம் மக்களைக் காப்பாற்றக் கோரியும் தங்கள் உடல்களில் தீயிட்டு நீதி கோரி உயிர்த் தியாகம் செய்திருந்தனர். அனத் வரிசையில் ஜெனீவாவில் தன்னுடலை தீக்கிரையாக்கி தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காய் உயிர்த்தியாகம் செய்த மாவீரன் “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள விதைகுழி மேல் கட்டப்பட்டுள்ள 21 தியாகிகளுக்குமான நினைவுக் கல்லறையிலேயே இச் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.​



 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post