( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இதுவரை வழங்காமை தொடர்பாக கேட்டறிய விஜயம் செய்த சவூதித் தூதுக்குழுவினர்…………….

கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதிஅரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகள் இதுவரை அம்மக்களிடம் வழங்கப்படாமல் பற்றைக் காடுகளாகக் காட்சி தரும் நிலமையினையும் ஏன் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வில்லை என்பதையும் அறிந்து கொண்ளும் நோக்கில் நேற்று (18) சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டார்.

குறித்த வீடுகளை பார்வையிட்ட சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி கருத்து தெரிவிக்கையில்,

இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் சேதமடைந்துள்ள வீடுகளையும் திருத்திக் கொள்ள தேவையான நிதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மூலம் மேற்கொண்டு அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு இந்த வீடுகள் யாவும் மிக விரைவில் வழங்கப்படும் என்று சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

இக்குழுவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர். மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.மாகிர். ஏ.எல்.தவம் உள்ளிட்ட பல அதிகாரிகளும் வருகை தந்து வீடுகளையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டிடங்களையும் பார்வையிட்டனர்.

அன்றய அரசின் வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரபின் முயற்சியினால் இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா –
dsc_9520

dsc_9533 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post