ethiri.com

தமிழீழப் பொருண்மிய தடையும் – அதில் இருந்து மீட்டு சென்ற புலிகள் பலமும் – சிங்களத்தை கலங்க வைத்த புலிகளின் தந்திரம், ..!

90களில் சிறிலங்கா அரசின் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து மக்களையும் தேசத்தையும் பாதுகாப்பது என்பது விடுதலைப் போராட்டத்தில் அதிகம் எழுதப்படாத பக்கமாகும்.
உற்பத்திகளை முடக்கல், உணவு தட்டுப்பாட்டை உருவாக்கி மக்களை பட்டினிச் சாவின் விளிம்பிற்குத் தள்ளுதல், வேலை வாய்ப்பின்மையை அதிகரித்தல், அதன் மூலம் உளவியல் தாக்கத்தை பாவித்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினை நோக்கி ஈர்த்தல் உட்பட மக்களை அரசின் இரும்புப் பிடிக்குள் தங்கியிருக்க வைத்தல், எரிபொருள் தட்டுப்பாட்டினால் அன்றாடத் தேவைகளுக்கான சக்தி மற்றும் போக்குவரத்தினை முடக்குதல், நாளாந்த சிவில் நிர்வாகத்தினை முடக்குதல் போன்ற பரந்துபட்ட விளைவுகளை அரசு திட்டமிட்டது.
மக்களில்லாத பிரதேசமாக உருவெடுக்கும் தாயகம் ஊடுருவலைத் தடுக்க முடியாத நிலையில் அரசின் பாதுகாப்புப் படையினர் வசம் தானாகவே விழுந்து விடும் என்று அன்றைய பிரேமதாசா அரசு கடும் பொருளாதாரத் தடையினை முடுக்கி விட்டது. உற்பத்திக்கான உள்ளீடுகள், எரிபொருள், சக்தி அரிதாகவே கிடைத்த நிலையில் பல்லாயிரக்கணக்கான விலை நிலங்கள் தரிசாக மாறத் தொடங்கின. விவசாயிகள் வீட்டிலேயே உணவுத் தட்டுப்பாடு செயற்கையாக உருவாகியது.
அதிக மக்கள் தொகையும் குறைந்தளவு உற்பத்தி நிலப் பரப்பையும் கொண்ட யாழ் மாவட்டம் பட்டினிச் சாவை நோக்கி மெதுவாக தள்ளப்பட்டது. வன்னி, மன்னார் மாவட்டங்களில் சிரமப்பட்டு உற்பத்தியாக்கிய நெல் களஞ்சியப்படுத்தல் வசதி மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இன்னொரு விதமான உற்பத்தி முடக்கம் உருவாக்கப்பட்டது. கடலில் இறங்க முடியாத நிலையில் செல்வம் கொழிக்கும் கடல் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் கடல் தொழிலார்கள் கூட உணவுத் தேவைக்கு கையேந்தும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
அரசினால் மிக கூர்மையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடை தமிழீழ மக்களின் கழுத்தில் போடப்பட்ட தூக்குக் கயிறாக மெல்ல மெல்ல இறுகத் தொடங்கியது.
விடுதலைப் போராட்ட காலத்தில் எவ்வளோவோ சவால்களுக்கு முகம் கொடுத்து நெருக்கடிகளை வெற்றிகளாக்கிய வரலாறு எம்முடையது. நாம் அரசியல் ராணுவ ரீதியான பின்னடைவுகளை சந்தித்ததுவும் பின் அதிலிருந்து மீண்டு எழுச்சி பெற்றதுவும் பலர் அறிந்ததே!
ஆனால் நாளாந்த வாழ்க்கையை மெதுவாக முடக்கி நைஜீரியாவின் பயப்பிரா (Biafra) மாநிலத்தில் நடந்தது போல இறுதியில் மக்களை முழந்தாளிட்டு சரணாகதி அடையச் செய்யலாம் என்பதுவே சிறிலங்கா அரசின் திட்டமாக இருந்தது.
இந்த மூலோபாயம் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதுடன் நடைமுறை அரசிற்கான (de facto state) அத்திவாரங்கள் எவ்வாறு போடப்பட்டது என்பது விடுதலையை விரும்பும் அனைத்து மக்களும் அறிய வேண்டிய விடயமாகும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுரை அவ்வாறான பல முயற்சிகளில் ஒன்றாகப் பதிவிடப்பட்டது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post