ethiri.com

தேசிய மட்ட 21 வயதிற்குட்பட்டவருக்கான குண்டு எறிதல் போட்டியில் வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி வறுமைக்கு மத்தியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி 9.76 மீற்றர் தூரத்தில் குண்டு எறிந்து தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை பாடசாலை சமூகம், பெற்றோர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஏ9 வீதி வழியாக குறித்த மாணவியை வாகனத்தில் ஏற்றி பான்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களின் கரகோசத்துடன் கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மாணவியையும், அவரது பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

ethiri.com

இதேவேளை, குறித்த மாணவியின் குடும்பம் இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்து யுத்த அவலங்களை முழுமையாக சுமந்து மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

e3

e2

e1

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post