ethiri.com

மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியை கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டார்னகா பகுதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுவன் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். மாலை வீட்டிற்கு வந்த போது அவன் முதுகில் காயம் இருந்துள்ளது. அதனை பார்த்த சிறுவனின் தாத்தா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று கேட்ட போது அவர்கள் சரியாத பதில் கூறவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றொர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தையை துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ethiri.com

சிறுவன் வகுப்பில் உள்ள மாணவனுடன் சண்டையில் ஈடுபட்டு அவனை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியை சிறுவனை தாக்கியுள்ளார்.

இந்நிலையில், குழந்தை உரிமைகளுக்கான தன்னார்வலர்கள் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளியை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post