ethiri.com

விமானப்படை தளங்களை தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவல்-உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ- தொய்பா இயக்க தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களது ஊடுருவல்கள் அனைத்தும் எல்லையில் வெற்றிகரமாக முறியடிக்கப்படுவதால் சமீப காலமாக தீவிரவாதிகளின் சதி திட்டம் அரங்கேறவில்லை.

ethiri.com

இதையடுத்து லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளின் பார்வை காஷ்மீரில் இருந்து மற்ற மாநிலங்கள் மீது திரும்பி உள்ளது. பதன்கோட் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்தியது போன்று விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த சதி செய்துள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீரில் பதுங்கியுள்ள லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளில் 7 பேர் உத்தரபிரதேச மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் காசியா பாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தை தகர்க்கும் திட்டத்துடன் அவர்கள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் ஆயுதப் பயிற்சி பெற்ற அந்த 7 தீவிரவாதிகளும் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. தற்போது அதிகாலையில் அதிக பனி மூட்டம் இருப்பதால் அதை பயன்படுத்தி விமானப்படை தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த சதி செய்துள்ளனர்.

உளவுத்துறையின் குறிப்பிட்ட இந்த பிரத்யேக எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹிண்டன் விமானப் படைத் தளம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த தளத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் அதிநவீன கருவிகளுடன் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அந்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post