ethiri.com
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொது ஜன பெரமுன கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்றைய தினம் பஸில் உள்ளிட்ட குழுவொன்று அந்தக் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பங்களை கையளித்து அதில் இணைந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அந்தக் கட்சிக்கு மறைமுக தலைவராக இருக்கின்ற போதும் தனது அரசியல் இருப்பு கருதி அந்தக் கட்சியுடன் தொடர்பு இல்லாதது போல் தொடர்ந்தம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ethiri.com