ethiri.com

சிறுமிகளை கடத்தி திருமணம் முடித்த கிழவர்கள் – சிக்கியது கடத்தல் கும்பல்

திருமணத்திற்காக ஏழை முஸ்லீம் சிறுமிகளை கடத்திய வழக்கில் இரண்டு பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

திருமணத்திற்காக ஏழை சிறுமிகள் கடத்தல்: பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது
ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் ஐதராபாத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வெளிநாடுகளில் உள்ள பெரிய பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லீம் சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். வெளிநாட்டினர் இங்குள்ள புரோக்கர்கள் மூலம் சிறுமிகளின் பெற்றோரிடம் அதிக அளவு பணம் மற்றும் நகையை கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். புரோக்கர்களுக்கும் கமிஷன் கொடுக்கின்றனர். பின்னர் சிறுமிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்துகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டு வேறு சிறுமிகளை விலைக்கு வாங்கி செல்கின்ற உண்மை வெளிவந்தது. சிறுமிகளின் கடத்தலுக்கு உள்ளூர் புரோக்கர்களும் உதவுகின்றனர்.

இந்நிலையில், நேற்று பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் சிறுமிகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவி செய்த புரோக்கர்கள் மற்றும் லாட்ஜ் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post