ethiri.com

இது தான் என் காதல் ….!

உன் மேலே எனக்கென்ன கோபம்..? – நிலை
உணராமல் நீ செய்தாய் பாவம் …
தடை போட்டு விடை பெற்றாய் நன்றோ ..?
தண்டனை நீ தந்த மன்றோ …?

பாடடி குயிலே நீ பாடு – நான்
பைத்திய காரன் தான் கூவு ….
ஏதடி செய்வேன் யான் கூறு …?
என் கேள்வியில் இருக்கு விடை நூறு ….

ethiri.com

பாம்பாகி உன்னை யான் கொத்தவோ – அடி
பாசத்தை இடையில் யான் விற்கவோ ..?
சிந்திக்க ஓர் நொடி மறந்தாயே
சீர் கெட்டு வலியினை தந்தாயே ….

கந்தன் மடம் கொண்ட வீடோ
கை கூப்பி கும்பிட்டால் வருமோ …?
ஈர் வள்ளி கொண்டான் நிலையோ
இதனாலே கோவண ஆண்டியோ …?

கன ..டா வாய் பேசுமோ …?
கன..வில் உரு வருமோ ..?
நிலை குறி செயல் புரியுமோ ..?
நிலை பெற்று உயிர் புகுமோ …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -10/11/2017
இது தான் என் காதல் ....! 

Related Post