ethiri.com

சென்னையில் 2-வது விமான நிலையம்: மத்திய – மாநில அரசுகள் பேச்சுவார்த்தை

சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, மாநில அரசுடன் ஆலோசனை நடந்து வருகிறது என விமான நிலையங்கள் ஆணைய தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மணி நேரத்துக்கு 18 விமானங்களை கையாண்டு வருகிறோம். கடந்தாண்டு 1 கோடியே 84 லட்சம் பயணிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இது 2030-ல் இருந்து 2035-ம் ஆண்டிற்குள் 12 சதவீதம் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால், ஒரு மணி நேரத்துக்கு 40 விமானங்களை கையாளும் நிலைக்கு தயாராக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர்.என்.சவுத்ரி மற்றும் விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

வரப்போகும் புதிய விமான நிலையம், பசுமை விமான நிலையமாக இருக்க வாய்ப்புள்ளது. இது அரசு – தனியார் பங்களிப்பு திட்டத்தில் அல்லது விமான நிலைய ஆணையமே அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவிலும் மேலும் ஒரு விமான நிலையம் தேவைப்படுகிறது. கொல்கத்தாவுக்கு மிக அருகில் உள்ள துர்காபூரில் இதை அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post