ethiri.com

ஆளில்லாமல் எஞ்சின் ஓடிய விவகாரம்: ரெயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் கர்நாடக மாநிலத்தின் வாடி ரெயில் நிலையத்தை நேற்று அடைந்தது. அங்கு டீசல் எஞ்சினில் இருந்து எலக்ட்ரிக் எஞ்சின் மாற்றும் பணி நடந்தது.

வாடி ரெயில் நிலையத்தில் இருந்து சோலாபூர் வரை அந்த எஞ்சின் சென்றது. அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் வாடி ரெயில் நிலையத்தை அடைந்தது. எஞ்சினில் இருந்து டிரைவர் இறங்கி சென்ற சிறிது நேரத்தில் எஞ்சின் ஓடத் தொடங்கியது.

ஆளில்லாமல் ரெயில் எஞ்சின் ஓடுவதை கண்ட டிரைவர், இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அருகிலுள்ள ரெயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். எதிரே வரும் மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரெயில்வே ஊழியர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து நல்வார் ரெயில் நிலையம் அருகில் போராடி எஞ்சினை நிறுத்தினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆளில்லாமல் எஞ்சின் ஓடிய விவகாரம் தொடர்பாக வாடி ரெயில்வே நிலைய அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்து மத்திய ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post