ethiri.com

மோசடியாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.395 கோடி பறிமுதல்

புழக்கத்தில் இருந்த 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டதும், மக்கள் அந்த நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் செய்தனர். அப்படி டெபாசிட் செய்தவர்களில் பலர் தங்களிடம் இருந்த அதிக அளவிலான நோட்டுகளை முறைகேடாக டெபாசிட் செய்து மோசடி செய்து இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் இப்படி சட்ட விரோதமாக டெபாசிட் செய்ததாக சி.பி.ஐ.க்கு 92 புகார்கள் வந்ததாகவும், இது தொடர்பாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.395 கோடியே 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். மேலும் இந்த மோசடி தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார் 

Related Post