ethiri.com

காட்டில் உள்ள சிங்கங்களை பைக்கில் விரட்டிய இளைஞர்கள்

குஜராத் மாநிலம் கிர் விலங்குகள் சரணாலயத்தில் 400 க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் உள்ளன. அப்பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. மற்றும் சட்ட விரோதமான சுரங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விலங்குகள் அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் வனத்தில் இருந்த சிங்கங்களை விரட்டி அடித்தனர். இரண்டு பேர் பைக்கை அங்கும் இங்குமாக ஓட்டுகின்றனர். இதனால் பயந்த சிங்கங்கள் காட்டிற்குள் ஓடி விட்டன. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த காட்டிலாகா விசாரணைக்கு ஆணையிட்டுள்ளனர். விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தவர்கள் தண்டனை அளிக்கப்படும். வீடியோவில் பைக் நம்பர் மங்கலாக தெரிகிறது. அந்த வாகனம் ராஜ் கோட் பகுதியைச் சேர்ந்தது எனக்கூறப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post