ethiri.com

தமது சுய இலாபத்துக்காக மஹிந்தவை கொண்டு வரத்துடிக்கும் சிலர்- போட்டு தாக்கும் முசுலீம் அரசியல்வாதி

மஹிந்த அரசை கொண்டுவரத் துடிக்கும் சிலரின் செயற்பாடுகள் யாவும் அவர்களின் அரசியல் சுய இலாபத்துக்காகவே அன்றி வேறு எதற்காவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளரும், சமூக சேவையாளருமாகிய ஏ.பி.அன்வர்டீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று 11 ஆம் பிரிவு அல் பாத்திமியா வித்தியாலயத்தின் 50 வது ஆண்டையொட்டி அவ் வீதியை கொங்றீட் இடுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.உவைஸ் தலைமையில் இன்று காலை (05) இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ethiri.com

அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆட்சியின்போது மஹிந்த அரசினால் எமது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன, அளுத்தம பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு பாரிய அநிதியை செய்தது மட்டுமல்லாமல் அவர்களின் சொத்துக்களையும், உடமைகளையும் அழித்தார்கள். அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம்களின் உடமைகள் சூரையாடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டன, கிறிஸ்மேன் என்ற பிரச்சினையை உண்டுபன்னினார்கள் இவ்வாறு பல சம்பவங்கள் அவர்களின் ஆட்சியின்போது இடம்பெற்றது. இதனை நீங்கள் யாரும் மிக இலகுவில் மறந்துவிட முடியாது.
அதுமாத்திரமல்லாமல், முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட இருந்த அபிவிருத்திகள் எல்லாவற்றையும் தடை செய்திருந்தார்கள். அவர்களின் செயற்பாடுகள் எல்லாவற்றையும் இந்த நல்லாட்சி அரசு முறியடித்து முஸ்லிம் மக்களுக்கு பாரிய அபிவிருத்தி மழையினை செய்தும், செய்து காட்டியும் வருகின்றது. இதனையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்த நல்லாட்சியை இன்று குறை கூறித்திரிகின்றவர்கள் அன்று மஹிந்த அரசுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு பல அமைச்சுப் பதிவிகளை வகித்தபோது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநிதிகளை அவர்கள் ஏன் தட்டிக்கேட்கவில்லை என்பதுதான் எனது கேள்வியாகும். இதற்கு அவர்களால் எவ்வித பதில்களையும் கூறிவிட முடியாது.
இன்று இந்த நல்லாட்சி அரசு முஸ்லிம்களை கௌரவப்படுத்தி வருகின்ற இதேவேளை அமைப்பாளர் பதவிகளையும் வழங்கி அவர்களின் பிரதேசத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துவருவதுடன் பல அபிவிருத்திகளையும் செய்துவருகின்றது. அந்தவகையில் ஒரு மாத காலத்துக்குள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் யாருமே கவனிப்பாரற்ற நிலைமையில் இருந்த 13 வீதிகளை 6 கோடி 91 இலட்சம் ரூபா நிதியின் மூலம் அந்த வீதிகளை கொங்றீட் வீதியாக மாற்றியமைக்க நான் முன்னின்று அமைத்துக்கொடுத்துள்ளேன். இதற்கு இந்த நல்லாட்சி அரசே காரணம் என்பதையும் எமது முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அதுமாத்திரமல்லாமல், இன்னும் பல வீதிகள் கொங்றீட் வீதிகளாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களை நான் ஆரம்பித்து வைத்துள்ளதுடன் அதன் வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிரிக்கின்ற இதேவேளை இன்னும் பல வீதிகளை ஆரம்பித்து வைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் நான் முன்னெடுத்து வருகின்றேன்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக என்னை ஜனாதிபதி நியமித்துள்ளார். எமது மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க என்னுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.

பைஷல் இஸ்மாயில் –
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post