( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தலைவர் வே.பிரபாகரன் வரலாறு தந்த வல்லமை பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா.

– ஈழத்து நிலவன் –

பிரபாகரன் என்ற

இப்பெயருக்குத்தானே

பீரங்கிகளும் பின்வாங்கின

பிரபாகரன் என்ற இப்பெயர்

கேட்டால்தானே இப்பிரபஞ்சமே

பிரமித்து நிற்கிறது!

வேங்கை உன் வேகம் கண்டு

சிறுநீர் கழித்தபடியல்லவா

சிதறி ஓடின

சிங்களத்து சிறு நரிகள்!

புரட்சி என்ற சொல்லுக்குப்

புது இரத்தம் பாய்ச்சிய நீ

புலித்தலைவன் மட்டுமல்ல!

எமைப் பொறுத்தவரை

இப்புவித் தலைவனும்கூட!

கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை

நீ கட்டியெழுப்பிய

படைகளிடமிருந்துதான்

கற்றுக்கொள்ள வேண்டும்!

உன் ஆயுதம் சினுங்கியவரையில்

தன ஆணவம் அடங்கியல்லவா

கிடந்தது சிங்கள ராணுவம்!

புரட்சியாளன் உன்

புகழ் பாடுவதில்

புல்லரித்துப் போகிறது

என் புதிய பேனா!

தலைவா உன் பிறந்தநாளே

தரணியில் எமக்குச் சிறந்த நாள்!

தமிழீழம் ஒன்றே உனக்கு

நாம் தர நினைக்கும் தகுந்த பரிசு!

தடுப்பவரின் தலைகொய்து

பருந்துகளுக்குப் பகிர்ந்தளிப்போம்!

எங்கள் இதயத்தில் வாழும்

இணையில்லாத் தலைவனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 

Related Post