( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மகிந்த மகன் நாமல் உட்பட 6 பேர் கைது தொடரும் பதற்றம்

இலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது இடம் பெற்ற அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட 6 பேர் இன்று செவ்வாய்கிழமை இரவு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரி.பி.சாணக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருடன் தென் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அத்துக்கோறள மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் அடங்குகின்றனர்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு நீண்ட கால குத்தகைக்குக் கையளிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிரணியினரால் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற தடையை மீறி முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தின்போது போலிஸாரின் வீதித் தடையை உடைத்தெறிந்து ஆர்பாட்டகாரர்கள் இந்திய துணைத் தூதுவராலயத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளை, குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது கடமையிலிருந்த 4 போலிஸார் காயமுற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்காக குறித்த 6 பேரும் அம்பாந்தோட்டை போலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பெண்கள் உட்பட 30ற்கும் மேற்பட்டோர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
எதிரி

Related Post