ethiri.com

ராகுல் காந்தி குஜராத் மக்களை அவமதித்து விட்டார்: ஸ்மிருதி இரானி …..

குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, கடந்த சில தினங்களாக மக்கள் யாத்திரை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் மக்கள் யாத்திரையை கிண்டல் செய்து பேசினார்.

ethiri.com

இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி டுவிட்டரில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்மிருதி இரானி டுவிட்டரில் கூறுகையில், மாநிலத்தின் வளர்ச்சியை காண விரும்பும் 6.5 கோடி குஜராத்தி மக்களுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார். இதனால் அவர்கள் வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை அளிப்பார்கள்.

ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அங்கு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தட்டும். அதை விட்டுவிட்டு பா.ஜ.க.வின் மக்கள் யாத்திரையில் கவனம் செலுத்த வேண்டாம்.

குஜராத்தின் தலைசிறந்த தலைவர்களான சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரை நேரு-காந்தி குடும்பத்தினர் தான் இழிவுபடுத்தி உள்ளனர்.

பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, குறிப்பாக நேரு-காந்தி குடும்பத்தினர் குஜராத் மாநிலத்துக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என காரசாரமாக பதிவிட்டுள்ளார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post