ethiri.com

இதை தடுக்க யார் வருவார் ..?

செந் தமிழ் ஈழம் கண் பட்டதடா -மண்
செந்தீயிலே இன்று வேகுதடா
பண் பட்ட வாழ்வியல் தொலையுதடா – நாளும்
பாலியல் செய்திகள் தலைப் பாகுதடா

விண் தொட்ட வீரர்கள் போனதினால் -மண்ணில்
வீணர்கள் தொல்லைகள் கூடுதடா
கண் தொட்டு கண் தட்டி விளையடுதடா – கூடி
கற்பை விற்றே தான் போகுதடா

ethiri.com

அந்நிய சிங்களம் கலக்குதடா – கலவி
அங்கேயும் அப்போதும் பிறக்குதடா
என் தமிழ் மானம் இறந்திடவோ -இழி
எம் மண்ணில் இன்று நடக்கிறதோ …?

பொறி தட்டும் தமிழ் ஒன்றும் இல்லை -இந்த
போருக்கு தடை போட யாருமில்லை
வெறி கொண்டு சிங்களன் விதைக்கிறானே -இதை
வேரோடு அறுத்திட யார் வருவான் ..?

– வன்னி மைந்தன்-
10/07/2016
 

Related Post