ethiri.com

நன்றி கெட்ட மனிதன் …!

வீட்டில மாட்டை கட்டியே – நீ
விடிந்ததும் பாலை கறப்பாய்
மாலை ஆனாதும் மறு படி நீயே
மடியினை தடவி பறிப்பாய் …

திண்டவை கழிந்து சாணியாய் விழவே
திண்ணைகள் நாள் தோறும் மெளுகுவாய்
ஒட்டியே மாடு வயது கடந்தால்
ஓடியே இறைச்சிக்கு விற்பாய் ….

சத்தாய் பாலை குடித்து நீயும்
சகடையாய் தானே விளைந்தாய்
வெட்டியே மாட்டை ஏலத்தில் விற்க
வேண்டியே வந்து தின்றாய் ….

ஆளாய் உன்னை ஆறடி உயர்த்தி
ஆளாக்கி வைத்த மாட்டை
நாயிடை கீழாய் நன்றி கெட்டு
நாயே ஏனடா தின்றாய் ….?

– வன்னி மைந்தன்-
10/07/2016

Related Post