ethiri.com

புரிந்து கொள்ள பழகு ..!

சோற்றுக்கு வழியென்ன முன் தேடுவாய் -ஊர்
செய்திகள் சொல்லியே பின் பாடுவாய்
ஆக்கியே உண்ண உணவில்லை -நீ
ஆராரோ செய்திகள் ஏன் காவினாய்…?

ஓடும் நேரத்தை வீணாக்கி ஏனோ
ஓரத்தில் நின்றிட முனைகின்றாய் ..?
வேர் விட்டு நீதானே மேல் உயர
மேலான வேலைகள் புரிவாயே ….

ethiri.com

சும்மா கிடக்கின்ற வாயாலே -பல
சூடேறும் காதைகளை வீசிறாய்
நாடேறி உலகதை ஆளாது -ஏனோ
நாவாலே வாலாட்டி வாழ்கின்றாய் ..?

உரமான சிந்தை உள்ளிருக்க
உதறியே ஏனோ அலைகின்றாய் ..?
வளமான வாழ்வு சூடிடவே
வளமான வாழ்வுக்கு வழி தேடுவாய் …

அரச பணத்திலே வாழ்வாயோ
அதனாலே வீணாகி போனாயோ ..?
திண்டாட்டம் ஒரு நாள் உனை வாட்டும் -அப்போ
திண்ணைக்கு உன்னை யாரும் அண்டாரே …!

– வன்னி மைந்தன்
21/07/2016

Related Post