ethiri.com

வயதான வாலிபம்…!

துடையை பார்த்து எடையை போட்டு
துணைக்கு அழைக்க எண்ணாதே
இலையை போட்டு குழையல் போட்டு
தின்ன என்னை பார்க்காதே …

வளையல் வாங்கி கையில் போட்டு
வளைத்து போக எண்ணாதே
விலையை போட்டு உடலை தின்ன
மீசையாரே எண்ணாதே ..

ethiri.com

நரைகள் வீழ்ந்த ராசாவுக்கு
நரைக்கவில்லை ஆசை
இளசு போல துள்ளி ஓடி
இரையை தேடுதேன் பாசை ..?

வெட்டி வெட்டி விழியை ஆட்டி
விடலை பிள்ள பார்க்காதே
வெள்ளை பல்லை காட்டி என்னை
வெளியில் சிரிக்க வைக்காதே …

அகவை தாண்டி அறுபதாச்சு
ஆசை நரைக்கவில்லை
ஓசை எழுப்பி ஆசை வீச
ஒங்க நிலை பாவம் தான் ..!

வன்னி மைந்தன்
14-11-2014
 

Related Post