( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

கதற கதற துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த கும்பல் …………….

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர்நகர் மாவட்டம் நிர்காஜ்னி என்ற கிராமத்தில் ஒரு தம்பதியினர் 3 மாத குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த நான்கு பேர் தம்பதியினரை வழி மறித்துள்ளனர்.

எதிரி

இதனையடுத்து, கணவரை தாக்கிவிட்டு அப்பெண்ணை அருகிலுள்ள கரும்பு வயலுக்குள் இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அப்பெண் மற்றும் கணவரை அடித்து உதைத்து நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post