ethiri.com

வித்தியா கொலையாளிகள் மீது 41 குற்றாட்டு – மரண தண்டனை உறுதி

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் 2ஆம் எதிரி ஜெயக்­கு­மார், 3ஆம் எதிரி தவக்­கு­மார், 5ஆம் எதிரி சந்­தி­ர­கா­சன் மற்­றும் 6ஆம் எதிரி துஷாந்த் ஆகி­யோர் மீதான வன்­பு­ணர்வு, கொலைக் குற்­றச்­சாட் டுக்­கள் சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன.
சுவிஸ்­கு­மார், அவ­ரது சகோ­த­ரர் சசி­த­ரன் மற்­றும் கோகி­லன் ஆகி­யோர் மீதான குற்­றச் சம்­ப­வத்­துக்கு சதித் திட்­டம் தீட்­டி­யமை , அதற்கு உடந்­தை­யாக இருந்­தமை ஆகிய குற்­ற­ச் சாட் டுக்­க­ளும் சாட்­சி­க­ளால் நிரூ­பிக்­கப் பட்­டுள்­ளன.
எனி­னும் முத­லாம் மற்­றும் ஏழாம் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட் டுக்­களை நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் நிரூ­பிக்க முடி­ய­ வில்லை” இந்த வழக்கை அரச தரப்­பில் நெறிப்­ப­டுத்­திய பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் இவ்­வாறு தீர்ப்­பா­ யத்­தி­டம் ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைத்­தார்.
புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வரு­கி­றது.
வழக்­குத் தொடு­நர் தரப்பு மற்­றும் 9 எதி­ரி­க­ளின் சாட்­சி­யப் பதி­வு­கள் கடந்த 29ஆம் திக­தி­யு­டன் நிறை­வ­டைந்­தன. இரு தரப்பு தொகுப்­பு­ரை­கள் நேற்­றும் இன்­றும் முன்­வைக்­கப்­பட வேண்­டும் என்று தீர்ப்­பா­யம் கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது
அத­ன­டிப்­ப­டை­யில் நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் தீர்ப்­பா­யம் கூடி­யது
எதி­ரி­கள் பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது பேரும் தீர்ப்­பா­யத்­தி­டம் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.
விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. முத­லில் வழக்­கேட்­டில் சில திருத்­தங்­கள் செய்­வ­தற்கு வழக்குத் தொடு­நர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி குமார் இரட்­ணம் விண்­ணப்­பம் செய்­தார். அதனை அடுத்து திருத்­தங்­கள் செய்­வ­தற்கு தீர்ப்­பா­யம் அனு­ம­தித்­தது. தொடர்ந்து எதி­ரி­கள் தரப்­புச் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ர­னும் சில திருத்­தங்­கள் செய்­வ­தற்கு விண்­ணப்­பம் செய்­தார். அதற்­கும் தீர்ப்­பா­யம் அனு­ம­தி­ய­ளித்­தது.

வழக்கு தொடு­நர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­னார் அதி­பதி குமார் இரட்­ணம் தொகுப்­பு­ரையை ஆரம்­பித்­தார்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாட­சா­லைக்கு சென்று கொண்­டி­ருந்த புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த சிவ­லோ­க­நா­தன் வித்­தியா எனும் மாணவி கடத்­தப்­பட்டு பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார்.
அது தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­க­ளில் தற்­போது எதி­ரிக் கூண்­டில் நிற்­கும் ஒன்­பது பேரை­யும் சட்­டமா அதி­பர், எதி­ரி­க­ளாக கண்டு அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து, குற்றப் பகிர்வுப் பத்தி­ரத்தை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றின் பதி­வா­ள­ருக்கு அனுப்பி வைத்­தார்.

ethiri.com

சிறப்­புத் தீர்ப்­பா­யத்­தால் எதி­ரி­க­ளுக்கு குற்­ற­ப் ப­கிர்வு பத்­தி­ரம் தனித்­த­னி­யாக வாசித்துக் காட்­டப்­பட்­டது. அதன் போது , கடத்தத் திட்­டம் தீட்­டி­யமை , கடத்­தி­யமை , வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை , படு­கொலை செய்­தமை, உடந்தை அளித்­தமை உள்­ளிட்ட 41 குற்­றச்­சாட்­டுக்­கள் இவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டன. அத்­தனை குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் எதி­ரி­கள் தனித்­த­னியே மறுத்து தாம் நிர­ப­ரா­தி­கள் என தீர்ப்­பா­யத்­தி­டம் உரைத்­த­னர்.
தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் நடை­பெற்ற சாட்­சி­யப் பதி­வு­க­ளின்­போது, படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வி­யின் தாயார் சாட்­சி­யம் அளிக்­கை­யில், “எனது மகள் 13ஆம் திகதி பாட­சா­லை­யில் கூட்டு முறை என்­ப­த­னால் காலை 7 .15 மணி­ய­ள­வில் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டார். அவர் மாலை­வரை வீடு திரும்­ப­வில்லை. அத­னால் அவ­ரைத் தேடி அலைந்த பின்­னர், குறி­காட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­னுக்கு முறைப்­பாடு செய்­யச் சென்­றோம். அங்கு முறைப்­பாட்டை ஏற்க முடி­யாது, ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலையத்துக்­குச் சென்று முறைப்­பாடு செய்­யு­மாறு கூறப்­பட்­டது. அத­னால் நாம் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­துக்கு இரவு சென்று சாட்­சி­யம் வழங்­கி­னோம்.

மறு­நாள் 14ஆம் திகதி காலை வேளை­யில் மக­ளைத் தேடிச் சென்றபோது, பாழ­டைந்த வீடொன்­றின் பின் பகு­தி­யில் உள்ள பற்­றைக்­குள் மக­ளின் சட­லம் காணப்­பட்­டது. அதனை முத­லில் மகன் கண்­டார். மகன் சட­லத்தைக் கண்டு கதறி அழுத சத்­தத்தைக் கேட்டு நான் அந்த இடத்­துக்­குச் சென்று பார்த்தபோது மகள் சட­ல­மாகக் கிடந்­தார்” எனச் சாட்­சி­யம் அளித்­தி­ருந்­தார்.

அதே­போன்று இந்தக் குற்­றச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர் எனும் சந்­தே­கத்­தில் 11ஆவது சந்­தே­க­ந­ப­ராகக் கைது செய்­யப்­பட்ட உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரன் என்­ப­வ­ருக்கு சட்ட மா அதி­பர் நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தாக உறுதி அளித்­ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்­சி­ய­மாக மாறி இந்­தத் தீர்ப்­பா­யத்­தில் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“எதி­ரிக் கூண்­டில் 6ஆவது எதி­ரி­யாக உள்ள பெரி­யாம்பி என அழைக்­கப்­ப­டும் சிவ­தே­வன் துஷாந்த், படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வியை ஒரு தலை­யாகக் காத­லித்­தார். அந்­தக்­கா­லப் பகு­தி­யில் துஷாந்­தின் மோட்­டார் சைக்­கி­ளில் நான் பின்­னால் இருந்து செல்­வேன். மாணவி பாட­சாலை செல்­லும் நேரம் , வீடு திரும்­பும் நேரங்­க­ளில் மாண­வி­யின் பின்­னால் செல்­வோம். ஒரு நாள் மாணவி தனது சப்­பாத்­தைக் கழட்டி துஷாந்தை நோக்கி வீசி­னார்.

அதன் பின்­னர் மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் என்­ப­வ­ரின் வீட்­டில் நானும் பெரி­யாம்பி எனும் துஷாந்­தும் கள்­ளுக் குடிக்­கச் சென்­றோம். அங்கு 5ஆம் எதிரி தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் 2ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் மற்­றும் 3ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் ஆகி­யோ­ரி­டம் வித்­தியா துசாந்­துக்கு சப்­பாத்­தால் எறிந்த சம்­ப­வத்தை நான் கூறி­னேன். அப்­போது , ஜெயக்­கு­மார் மற்­றும் தவக்­கு­மார் ஆகி­யோர் 25ஆயி­ரம் ரூபா பணம் தந்­தால் வித்­தி­யா­வைத் தூக்­கித் தரு­வ­தாகக் கூறி­னார்­கள்.அதன் பிர­கா­ரம் அவர்­க­ளுக்கு 23ஆயி­ரம் ரூபா பணம் கொடுத்­தோம்.

வித்­தி­யாவைக் கடத்­து­வ­தற்­காக 11ஆம் திகதி காத்­தி­ருந்­த­வேளை அன்­றைய தினம் வித்­தியா வேறு ஒரு மாண­வி­யு­டன் வந்­தார். அத­னால் அன்­றைய தினம் திட்­டத்தைக் கைவிட்­டோம். மறு­நாள் 12ஆம் திகதி காத்­தி­ருந்­த­போது வித்­தியா பாட­சா­லைக்கு வர­வில்லை. மறு­நாள் 13ஆம் திகதி நானும் பெரி­யாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் 2ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் , 3ஆம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் மற்­றும் மாப்­பிள்ளை எனும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் மாண­வி­யின் வரு­கைக்­காக சின்ன ஆலடி எனும் பகு­தி­யில் காத்­தி­ருந்­தோம்.
அதன் பின்­னர் மாண­வியை அங்­கி­ருந்து தூக்­கிச் சென்று அரு­கில் இருந்த பற்­றைக்­குள் உள்ள மரம் ஒன்­றின் கீழ் வைத்து கால் ஒன்றை இழுத்து மரத்­தில் கட்­டி­னார்­கள். அத­னோடு நான் அந்த இடத்­தில் இருந்து சென்­று­விட்­டேன்.
நான் அவர்­க­ளு­டன் சென்­றது காத­லுக்கு உதவி பண்­ணும் நோக்­கு­ட­னேயே. இவர்­கள் இவ்­வாறு செய்­வார்­கள் எனத் தெரிந்து இருந்தால், நான் அன்­றைய தினம் அவர்­க­ளு­டன் சென்று இருக்­க­மாட்­டேன்” என தனது சாட்­சி­யத்­தில் சுரேஷ்­க­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.
அதே­போன்று இந்­தச் சம்­ப­வத்தை நேரில் கண்ட மற்­று­மொரு சாட்­சி­யான மாப்­பிள்ளை என அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ் வ­ரன், “நான் இவர்­க­ளு­டன் சென்­றது துஷாந்­தின் காத­லுக்கு உத­வும் நோக்­கு­டன்­தான். ஆனால் இவர்­கள் இவ்­வாறு செய்­வார்­கள் என நான் நினைக்­க­வில்லை.
இவர்­கள் மாண­வியை வன்­பு­ணர்வு செய்­ததை மாறி மாறி பெரிய தொடு­திரை அலை­பே­சி­யில் (டச் போன்) ஒளிப்­ப­டங்­கள் மற்­றும் காணொலி எடுத்­த­னர். அதனை தனது மச்­சா­னுக்கு அனுப்ப வேண்­டும் என துஷாந்த் சந்­தி­ர­கா­ச­னுக்கு கூறி­யதை தான் கேட்­டார்” என சாட்­சி­ய­ம­ளித்­தார்.
இந்­தக் குற்­றச் சம்­ப­வம் தொடர்­பில் வெளி­யில் யாருக்­கா­வது கூறி­னால் என்னைப் படு­கொலை செய்­வோம் என கூறி­ய­த­னால்­தான் , நான் யாருக்­கும் முத­லில் சொல்­ல­வில்லை என­வும் அவர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அதே­போன்று வேலணை பிர­தேச சபை பொறுப்­ப­தி­காரி சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில், சம்­பவ தின­மான 13ஆம் திகதி தமது பிர­தேச சபை­யால் சார­தி­யாக கட­மை­யாற்­றும் 6ஆம் எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த் காலை 9.15 மணி­ய­ள­வில்­தான் வேலைக்கு வந்­தார்” என சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.
மாண­வி­யின் தாயின் சாட்­சி­யம் மற்­றும் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யத்­தின் பிர­கா­ரம் மாணவி பாட­சாலை செல்­லும் நேரத்­தில் அதா­வது காலை 7.30 மணிக்­கும் 8.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் கடத்­தப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­த­ப்பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்
அவ்­வாறு எனில் இந்த வழக்­கின் 6ஆவது எதிரி இந்­தக் குற்­றத்­தைச் செய்­து­விட்டு காலை 9.15 மணிக்கு கட­மைக்குச் சென்­றி­ருக்­க­லாம். அதே­போன்று 5ஆம் எதிரி சம்­பவ தினத்­தன்று காலை 8 மணி­ய­ள­வில் சம்­பவ இடத்­திற்கு அரு­கில் சாரத்தை மடித்­துக் கட்­டி­ய­வாறு வேக­மாக நடந்து சென்­றதை பெண் ஒரு­வர் கண்­ணுற்று உள்­ளார். அவ­ரும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அதே­போல இரண்­டாம் எதி­ரி­யான ஜெயக்­கு­மாரை பாட­சாலை மாண­வன் ஒரு­வன் பாட­சாலை செல்­லும் நேரம் காலை 7.45 மணி­ய­ள­வில் சம்­பவ இடத்­துக்கு அரு­கில் கண்­டுள்­ளான். அவ­னும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் தோன்றி சாட்­சி­ய­ம­ளித்­தான்.
அதே­வேளை 2ஆம் எதி­ரி­யின் மனை­வி­யின் அண்­ணன் 2ஆம் மற்­றும் 3ஆம் எதி­ரி­களை சம்­பவ இடத்­துக்கு அரு­கில் சம்­பவ தினத்­தன்று கண்­டுள்­ளார். அதே­போல் சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆல­டிச் சந்­தி­யில் சுவிஸ்­கு­மார் என அழைக்­க­ப்படும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் உள்­ளிட்­ட­வர்­கள் வாக­னம் ஒன்­றில் இருந்­ததை கண்­ணுற்­றுள்­ளார். அவ­ரும் இந்தத் தீர்ப்­பா­யத்­தில் தோன்றி சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.
முத­லாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மா­ருக்கு எதி­ராக வழக்குத் தொடு­நர் தரப்­பால் சாட்­சி­யங்­கள் ஆதா­ரங்­களை முன்­வைக்க முடி­ய­வில்லை என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்­றோம். அதே­வேளை சம்­பவ தினத்­தன்று (13ஆம் திகதி ) தனது தம்­பி­யான மூன்­றாம் எதிரி பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தன்னைப் பேருந்து தரிப்­பி­டத்­துக்கு ஏற்­றிச் சென்­றது தொடர்­பில் அவர் தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பி­ட­வில்லை.
இரண்­டாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், தனது மச்­சான் தன்னை சம்­பவ தினத்­தன்று (13ஆம் திகதி) சம்­பவ இடத்­துக்கு அருகே கண்­ட­தா­கக் கூறி­யது,
குற்­றப்­பு­ல­ னாய்வு பிரி­வி­னர் எனது மச்­ச­ானு­டை­ய­தும் அவ­ரது மனை­வி­யி­ன­தும் (தனது சகோ­த­ரி­யின்) வாய்க்­குள் கைத்­துப்­பாக்­கியை வைத்து மிரட்­டி­ய­த­னால்­தான் எனக் கூறி­னார். அவ்­வாறு தாம் மிரட்­டப்­பட்­டதை மச்­சா­னும் மனை­வி­யும் வவு­னியா சிறைச்­சா­லை­யில் தன்னைக் கண்டு கூறி­ய­தா­க­வும் தீர்ப்­பா­யத்­தி ­டம் தனது சாட்­சி­யத்­தின்­போது தெரி­வித்­தார்.
இவ்­வாறு தனது சகோ­த­ரி­யும் அவ­ரது மச்­சா­னும் மிரட்­டப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் வேறு எங்­கா­வது வாக்­கு­மூ­லத்­தில் கூறி­னீரா? எனக் கேட்ட போது, இல்லை என்­றார். இந்த தீர்ப்­பா­யத்­தில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில் இந்த சம்­ப­வம் தொடர்­பில் உமது சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­யில் கேட்­டாரா? எனக் கேட்ட போது, அதற்­கும் இல்லை என பதி­ல­ளித்­த­து­டன் , சட்­டத்­த­ர­ணி­யி­டம்­தான் கூறி­ய­தா­க­வும் , சட்­டத்­த­ரணி கேட்­க­வில்லை என­வும் கூறி­னார். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.
மூன்­றாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தனக்கு வித்­தி­யாவைத் தெரி­யாது எனச் சாட்­சி­ய­ம­ளித்­தார். பின்­னர் தான் தனது அண்­ணா­வான இந்­தி­ர­கு­மாரைச் சம்­பவ தினத்­தன்று பேருந்­துக்கு ஏற்­றி­வி­டச் சென்ற போது வித்­தி­யா­வின் அண்­ணா­வைக் கண்­ட­தா­கச் சாட்­சி­ய­ம­ளித்­தார். அவ­ருக்கு வித்­தி­யா­வைத் தெரி­யாது. ஆனால் வித்­தி­யா­வின் அண்­ணா­வைத் தெரி­யும் எனக் கூறி­னார்.
நாலாம் எதி­ரி­யான மகா­லிங்­கம் சசி­த­ரன் இந்த குற்றத்தை கடற்­ப­டை­தான் செய்­துள்­ளது என இந்­தத் தீர்ப்­பா­யத்­தி­டம் சாட்­சி­ய­ம­ளித்­தார். சார­தாம்­பாள் மற்­றும் தர்­சினி எனும் பெண்­களை தீவ­கத்­தில் கடற்­ப­டை­தான் படு­கொலை செய்­தது. அதே­போல இந்­தக் கொலை­ யை­யும் கடற்­ப­டை­தான் செய்­தது எனத் தெரி­வித்­தார். அவர் இதற்கு முதல் வாக்­கு­மூ­லத்­தி­லேயோ நீதி­மன்­றி­லேயோ இந்­தத் தக­வலை தெரி­விக்க வில்லை. முதல் முத­லாக தீர்ப்­பா­யத்­தி­டம் எதி­ரி­கள் தரப்­புச் சாட்­சி­ய­ம­ளிக்­கும் போதே அவர் அத­னைத் தெரி­வித்­தார்.
ஆறாம் எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த் தனக்கு வித்­தி­யாவை தெரி­யாது. ஆனால் அவ­ரின் அண்­ணாவை நன்கு தெரி­யும் என தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.
ஏழாம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்­கம் குக­நா­த­னுக்கு எதி­ராக போதிய சாட்­சி­யங்­கள் ஆதா­ரங்­கள் இல்­லாத கார­ணத்­தால் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை.
எட்­டாம் எதி­ரி­யான ஜெய­த­ரன் கோகி­லன் தன்னை பொலி­ஸார் சித்­தி­ர­வதை புரிந்து காணொலி வாக்­கு­மூ­லம் எடுத்­த­தாக தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்­கே­யும் அது தொடர்­பில் குறிப்­பி­ட­வில்லை. சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்­கு­டு­தீ­வில் வாக­னம் ஒன்­றில் அமர்ந்­தி­ருந்து வித்­தி­யாவை பார்த்­தார் என இலங்­கேஸ்­வ­ரன் என்­ப­வர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
ஒன்­ப­தாம் எதி­ரி­யான சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் 17ஆம் திகதி தன்னை பொது­மக்­க­ளி­ன் தாக்குதலில் இருந்து தன்னை விஜயகலா காப்­பற்­றி­னார் என­வும் பின்­னர் தான் வீட்­டுக்குச் சென்­ற­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார். அது பொய். ஏனெ­னில் சட்­டத்­த­ரணி வீ.ரி.தமிழ்­மா­றன் தனது சாட்­சி­யத்­தில் சுவிஸ்­கு­மார் என்­ப­வ­ரின் வீட்­டுக்­குச் சென்ற போது, அவர் இல்லை என­வும் அவ­ரு­டைய மனைவி மகா­லக்­சு­மி­தான் நின்­ற­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அதே­வேளை சிறைச்­சா­லை­யில் தான் இப்­ரான் என்­பவ­ரு­டன் கதைத்த விட­யத்தை சுவிஸ்­கு­மார் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். சுவிஸ் நாட்­டில் ஹோட்­டல் ஒன்­றில் சமை­ய­ல­ாள­ராக வேலை செய்­வ­தா­க­வும் மாதாந்­தம் இலங்­கைப் பெறு­ம­தி­யில் பத்து இலட்­சம் ரூபா­வரை சம்­பா­திப்­ப­தா­க­வும் , அங்கு மாதாந்­தம் 5 தொடக்­கம் 6 இலட்­சமே செலவு என­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார். அத்­து­டன் வரு­டத்­துக்கு ஒரு தடவை இலங்கை வந்து போவ­தா­க­வும், அதன் போது 20 இலட்­சம் ரூபா­வரை செலவு செய்­வ­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு 2 கோடி ரூபா என்­பது பெரிய தொகை­யில்லை. எனவே சுவிஸ்­கு­மார் இந்த வழக்­கில் இருந்து தப்­பிச் செல்ல இப்­ரான் ஊடாக குற்­ற­பு­ல­னாய்வுப் பிரி­வின் முதன்மை விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வுக்கு 2 கோடி ரூபா கையூட்­டுக் கொடுக்க முயற்­சித்­தார்.
எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளின் தொகுப்­பு­ரைக்­காக தீர்ப்­பா­யத்­தால் இன்று புதன்­கி­ழமை திக­தி­யி­டப்­பட்­டது. அதனை அடுத்து ஒன்­பது எதி­ரி­க­ளை­யும் இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post