( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

உடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை, அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறாராம். ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டான இவர், சரித்திர படத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாராம். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லையாம்.

எனவே சரித்திர படத்தில் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தார்களாம். தற்போது உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே, தீவிர உடற்பயிற்சிக்காக தனது வீட்டில் அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைத்திருக்கிறாராம். தினமும் இடைவிடாமல் பயிற்சி செய்த நடிகை நல்ல பலன் கிடைத்து வருகிறதாம். இதுவரை புதிய படங்களை ஏற்காமல் இருந்த நடிகை, இப்போது புதிய படங்களுக்கு கதைகேட்க தொடங்கி இருக்கிறாராம். 

எதிரி

Related Post