ethiri.com

புதிய ரூபாய் நோட்டு ரகசியத்தை கசியவிட்ட பா.ஜ.க.வினர்: கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

நடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் சராசரி பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-

ethiri.com

கருப்புப் பணம் என்ற பெயரால் இந்த நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலையில் இருந்தே வங்கிகளிலும், ஏ.டி.எம். வாசலிலும் மக்கள் கால்கடுக்க காத்திருந்தும் பணம் கிடைப்பதில்லை.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இதுவல்ல. இந்த நடைமுறைக்குள் கருப்புப் பணம் வரவே வராது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான அம்பானி, அடானி, சரத் பவார், சுபாஷ் சந்திரா, பாதல் போன்றவர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களா? அல்லது, விவசாயிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், சிறு வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கிறார்களா? கருப்புப் பணம் என்பதற்கு பிரதமர் தரும் விளக்கம் என்ன?

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சராசரி மக்களின் மீதான ரணசிகிச்சை தாக்குதலேயொழிய, கள்ளச் சந்தை பேர்வழிகள் மீதான ரணசிகிச்சை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) அல்ல. பெரிய மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பாகவே பஞ்சாப் மாநில பா.ஜ.க. சட்டத்துறை தலைவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் வெளிவராத புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளுடன் சமூக வலைத்தளங்களில் உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் அறிவிப்புக்கு முன்னர் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு கருப்புப் பணத்தை மாற்றிகொண்ட தங்களது நண்பர்களை பட்டியலை பா.ஜ.க. வெளியிட வேண்டும். பழைய பணத்துக்கு பதிலாக, புதிய நோட்டுகளை தருவதற்கு கமிஷன் வாங்கும் இடைத்தரகர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Post