ethiri.com

மகிந்தவின் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – பீதியில் மகிந்தா குடும்பம் .

இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பாக தற்போதைய அதிபர் சிறிசேனா நிர்வாகம் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் செயலாளராக பதவி வகித்த லலித் வீரதுங்கா, தொலை தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனர் அனுஷா பால்பிட்டா ஆகிய 2 பேரும், அரசு பணத்தை 2015-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு விசாரித்தது.

விசாரணை முடிவில் 2 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.52 மில்லியன் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

ethiri.com

இந்த தீர்ப்பு, ராஜபக்சே காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளில் வந்துள்ள முதல் தீர்ப்பு ஆகும். இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும் மேல்முறையீடு செய்வார்கள் என அவர்களது வக்கீல் காலிங்க இந்திரதிசா தெரிவித்தார்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post