ethiri.com

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘மாணவி அனிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அனிதாவை நீட் தேர்வுதான் கொன்றது. இதற்கு மத்திய-மாநில அரசுகளே காரணம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே பதவி விலக வேண்டும்‘ என்றனர். 

ethiri.com

Related Post