ethiri.com

dsc_0496-1ஏ.ரி.எம். இயந்திரத்தில் கமராவைப் பொருத்தி அதன் மூலம் வாடிக்கையாளரின் ஏ.ரி.எம் அட்டை இலக்கங்கள், பெயர்களைப் பெற்று போலி அட்டை தயாரித்து பணம் கொள்ளையிட்டு வந்த நான்கு பேர் வவுனியா பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சோந்த ஒருவரும், வவுனியாவைச் சோந்த இருவரும் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது வங்கிகட கணக்குகளில் இருந்த பலரது பணம் தாம் எடுக்காமலே ஏ.ரி.எம் இயந்திரம் மூலம் பெறப்பட்டுள்ளதாக காட்டுவதாக வவுனியா பொலிசார் மற்றும் வங்கிகளில் பலர் முறையிட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அவதானித்து விசாரணை செய்த பொலிசாரே இந்தக் கும்பலை பிடித்துள்ளனர்.

ethiri.com

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கமராக்கள், போலி வங்கி அட்டைகள் எனப் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

dsc_0516-1 dsc_0496-1

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post