ethiri.com

வெல்லும் முன்னர் தோற்று விடு …!

தோல்விகளை நான் சுமந்து
தோற்று போயு ஓடவில்லை …
தேடுதலை நான் விரித்து
தேடுகிறேன் வெற்றிகளை ….

கூடி வானை முட்டி விட
கூட்டுகிறேன் திட்டமதை….
நாளை ஒரு காலமதில்
நம்புகிறேன் வென்றிடுவேன் ….

நொந்து நொந்து தானே பல
வென்றவர்கள் வாழ்வு உண்டு ….
நோதல் இன்றி வென்றுவிட்டால்
பெற்ற வெற்றி நின்றிடுமோ …?

தோல்விகளை முன் விரித்து
வெற்றிகளில் நீ ஏறு…
படித்து வந்த பாதையில் தான்
பக்குவமோ உச்சம் பெறும் ….

உச்சம் பெறும் வெற்றிகளோ
உன்னை உலகில் காட்டி விடும் …
தேடி புகழ் ஓடி வர – உன்
தோல்விகளே முன் விரியும் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -15/08/2017
 

Related Post