ethiri.com

என்று திருந்தும் இந்த சமுகம் ..?

கால் கடுக்க காடழிப்பு – வயிறு
சோறு வாங்க ஊர் துடிப்பு …
குப்பைக் குள்ள வாழ்ந்த சந்தை
கூட்டுகிற மனித விந்தை ….

ஓசியில வேலை செய்ய
ஒருவருக்கும் முடியவில்லை …
காசு என்றால் விழி திறக்கும்
கழிவு நிலை மாறவில்லை …..

ஊர் முழுக்க கூடும் சந்தை
உள் புறத்தில் எது விந்தை ..?
நாற்றம் வரும் நாள் திசையை
நாடி வந்தார் காணவில்லை …

ஏற்றம் ஒன்று வாழ்வில் உண்டால்
ஏறி வந்து பணி செய்வார் …..
கேடு கெட்ட ஊர் ஒன்றில்
கேளிக்கையாய் வாழ்ந்து நின்றார் …

மானுடத்தின் உட்புறத்தில்
மாநிடமோ வாழ்ந்திருந்தால் …
நேற்று சந்தை உயிர்த்திருக்கும்
நோய் தோற்றோ ஓடிருக்கும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -23/08/2017
வரட்சி நிவாரண த்திற்காக முரசுமோட்டை சந்தை சிரமாதன காட்சி பார்த்த போது

 

Related Post