ethiri.com

Yemen மீது அரபிய சண்டியர் சவூதி தொடுத்த போர் படுதோல்வி – களம் திரும்பும் இராணுவ வண்டிகள் – படங்கள் உள்ளே .

சவூதி அரபிய நாடுகளின் செல்வாக்கு மிக்க நாடாகவும் ,அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக தொடர்ந்து
திகழ்ந்து வருகிறது ,மனித தலைகளை வெட்டி கொலை புரியும் மனித நேயமற்ற மதவெறி பிடித்த கொடிய
நாடாகாவும் திகழ்ந்து வருகிறது .

இவ்வாறன மறு கோர முகத்தை கொண்டு இயங்கும் இந்த நாடே Yemen நாடு மீது பாரிய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றை
திடிரென மேற்கொண்டது .

ethiri.com

முப்படை தாக்குதல்களை தொடுத்த படி தரை இறங்கிய சவுதிய படைகள்
இடைவிடாது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன,

இராணுவ இலக்குகள் என கூறி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்க பட்டன,
ஒன்றுமறியாத அப்பாவி பிஞ்சுகள் முதல் முதியவர் வரை உயிர் குடித்து மகிழ்ந்தன தோட்டாக்கள் .

இந்த சமரில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகினர் ஒரு லட்சம் மக்கள் வரை படு காயமடைந்தனர் .
பல்லாயிரம் மக்கள் இடம் பெயர்ந்தனர்
பல கோடி சொத்துக்கள் நாசமாகின .

தான் என்ற சர்வதிகார ஆட்சியில் களம் இறங்கிய சவுதிக்கு படு தோல்வியே கிட்டியது
பாதுகாப்பு அமைச்சர் சவூதி இளவரசருக்கு பரிமாறிய மின் அஞ்சல் வழியான தகவல்கள் கசிந்துள்ளன
அதில் படு தோல்வியை சந்தித்து எனவும் தமது படைகள் தமது
நாடு திரும்புவதாகவும் அதில் குறிப்பிட பட்டுள்ளது .

குவைத் ,ஈராக் யுத்தம் போல இந்த போரும் அமைந்து விடும் என ஏதிர் பார்த்த நிலை
சற்று திசை மாறி முன் கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது .

அரபிய சண்டியருக்கு கிடைத்த முதல் பெரும் அடியாக இந்த சமர் தோற்றம் பெற்றுள்ளது ,
பலமானவன் தான் என சண்டை இட்டவருக்கு தனது பலவீனங்கள் இதன் ஊடாகவே தெரியவந்துள்ளது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post