வடமாநிலங்களில் தொடரும் கனமழை: உ.பி.யில் 33 பேர் பலி

வடமாநிலங்களில் தொடரும் கனமழை: உ.பி.யில் 33 பேர் பலி

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 33 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், இம்மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் மழை வெள்ளத்திற்கு இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 1,33,078 ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 846 கோடி ரூபாய் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் நேற்று பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org