இறந்த உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி -துரத்தி பிடித்த பொலிஸ்

இறந்த உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி -துரத்தி பிடித்த பொலிஸ்

பெரம்பலூர் : இறந்த மனிதனின் உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எம்.நகரில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் இறந்த பெண்ணின் உடலை 3 மாதங்கள் பதப்படுத்தி மாந்திரீகம் செய்தது தெரியவந்துள்ளது. மந்திரவாதியான கார்த்தி வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். பில்லி சூனியம், இறந்தவர்களிடம் பேச வைப்பது, வசியம் செய்வது என்று எல்லா மாநிலத்து மக்களையும் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. மாந்திரீகம் செய்ய பெண்ணின் உடலை சென்னையில் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மந்திரவாதி கார்த்தியிடம் இருந்து மண்டை ஓடு, எலும்புகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் 

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org