ethiri.com

20 ஆண்டுகளில் 12 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம்

அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நாட்டின் கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறையை பலப்படுத்தவும், அதை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சர்வதேச தரப்படுத்துதல் ஆலோசகர் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ethiri.com

இந்த ஆய்வின் முடிவில், மேற்படி துறைமுகங்களை மேம்படுத்த சுமார் 116 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் 85 பரிந்துரைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் உள்ளன.

இந்த துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களை ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் மேம்படுத்த சிறப்பு திட்டம் (மாஸ்டர் பிளான்) ஒன்றை மத்திய அரசு வகுத்துள்ளது. துறைமுகங்கள் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி ரூ.91,434 கோடியில் 142 துறைமுக விரிவாக்க திட்டங்கள் மற்றும் 884 மில்லியன் மெட்ரிக் டன் திறன் உருவாக்க நடவடிக்கைகளை இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் அடுத்த 20 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மொத்த திட்டங்களில் ரூ.28,767 கோடி மதிப்பிலான 58 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Related Post