ethiri.com

சென்னை போரூரில் நடத்திய “தமிழீழம்” தமிழர் தாயகம் மாநாடு

மாநாடு கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் 06.08.2017 அன்று சென்னை போரூரில் தொடங்கியது. தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றுச் சேர்ந்து முழங்கும் இம்மாநாட்டினை இயக்குனர் வ.கௌதமன் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டினை தவத்திரு ஆத்மானந்த அடிகளார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஜாதி மத வேறுபாடின்றி இளைஞர் கூட்டத்தின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் என தி.வேல்முருகன் தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரன் கற்பித்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டினையும் மனதில் நிறுத்தி தமிழ் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தந்த பழ.நெடுமாறன், தி.வேல்முருகன், நீதியரசர் அரி.பரந்தாமன், தொல்.திருமாவளவன், த.பானுமதி உள்ளிட்டோருக்கு கவிஞர் காசி ஆனந்தன் புத்தகம் பரிசளித்து கௌரவித்தார்.

ethiri.com

தொடர்ந்து இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் செயலாளர் பரமு பாலன் வரவேற்புரை ஆற்றினார்.

வரவேற்புரையை தொடர்ந்து வழக்கறிஞர் த.பானுமதி உரையாற்றினார். தமிழீழம் உருவாகினால் மட்டுமே இந்தியாவிற்கு பாதுகாப்பு. இதனை உணர்ந்து இந்திய அரசு செயல்படவேண்டும் என பானுமதி இந்திய அரசிற்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து தமிழர் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்புரை வழங்கினார்.

வழக்கறிஞர் பானுமதி கூறிய கருத்துக்களை வழிமொழிந்து தனது உரையை அவர் ஆரம்பித்தார். இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலை என்ற வார்த்தையை அன்றே பயன்படுத்தி இலங்கை அரசை எச்சரித்தார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். சீனாவினாலும் சிங்களவர்களாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஈழத்தமிழ் மக்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள நன்றாக தெரியும்.
ஏனென்றால் அவர்களுக்கு உன்னதமான தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அதனால் தமிழர்கள் தற்போது விழிப்புடன் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே இந்திய மத்திய அரசு ஈழ விடுதலைக்கு துணை நிற்பதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு உரையாற்றினார்.

இன்றைய பூகோள அரசியலை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் இந்தியாவிற்கு இலங்கை நட்பு நாடாக இருந்ததில்லை. தமிழீழம் மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக விளங்க முடியும். இந்திய மத்திய அரசு ஒருபோதும் சிங்கள அரசிற்கு துணை நிற்கக் கூடாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக்கொண்டு, அடுத்தகட்டத்திற்கு செல்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை வழங்கினார்

இன்றளவிலும் இலங்கையில் தமிழர்களின் அடையாளம், கட்டமைப்புகள், கோவில்கள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது.
வல்லரசுகளை சார்ந்து தான் ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கை அமையும். உலக ஏகாதிப்பத்திய அரசுகளால் மட்டுமே ஈழ விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியும். அதுதான் புவிச்சார்பு அரசியலின் எதார்த்தம்.
ஆனால் இந்த வல்லர்சுகள் இலங்கையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஈழ விடுதலை சாத்தியம். இந்திய அரசு பாஜக-வாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் இந்தியாவுடனான ஈழத்தமிழர் நட்புறவு அவசியம். மிக முக்கியம். அத்தகைய ராஜ தந்திர நகர்வை முன்னெடுத்துள்ளார் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

🔴பெரும் தமிழர் நீதியரசர் அரி பரந்தாமன்

இந்த பேச்சுக்களை தொடர்ந்து தமிழீழம் தமிழர் தாயகம் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
🔴இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்

🔴இயக்குனர் கு கணேசன்

🔴கோவை.கு.ராமகிருஷ்ணன்

🔴பேராசிரியர் ராமு.மணிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை

🔴கருங்குயில் கணேசன்

🔴தமிழ் உணர்வாளர் நாடோடி தமிழர், மும்பை உலக தமிழர் பேரமைப்பு

🔴பேராசிரியர் மு. நாகநாதன், தமிழ் நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர்

🔴முகமது முனீர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணைத்தலைவர்

🔴எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி

🔴ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன்

🔴ம. நடராஜன்

🔴வை. கோபால்சாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்.
https://youtu.be/GjBCbGMwEg0 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post