ரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை

ரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை ஒருவர் தனது ரசிகருக்கு பளார் ஒன்றை விட்டிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, தமிழ் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மகேஷ நடிகருடன் அவர் நடித்துள்ள சிலந்தி என்பதன் ஆங்கிலப் பெயருடைய படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் தமிழில் சிறுத்தை நாயகன் போலீசாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதுதவிர தமிழில் சிங்க நடிகரின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதுபோக புலி நடிகரின் அடுத்த படத்திலும் நாயகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறாக தென்னிந்திய மொழிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் அந்த நடிகை சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருக்கிறாராம்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகையை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்திருக்கிறாராம். நடிகை அவரை பார்த்த போது அந்த வாலிபர் திரும்பிக் கொண்டதாகவும், நடிகை மீண்டும் நடக்கத் தொடங்கியவுடன் அந்த நபர் நடிகையை மீண்டும் பின்தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான அந்த நடிகை அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுவிட்டு அந்த இடத்தை காலிசெய்திருக்கிறாராம். எளிதில் கோபமடையாத தன்னையே அந்த நபர் கோபப்படுத்தி விட்டதால் தான் அந்த நபரை அடித்ததாக நடிகை கூறியிருக்கிறாராம். . 

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org