ethiri.com

மருத்துவ மனைக்கு காசுகட்ட பிறந்த பிள்ளையை விற்ற பெற்றோர்

மருத்துவமனையில் கட்டணம் செலுத்த பணமில்லாததால் பிறந்த பெண் குழந்தையை ரூ.7,500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் குழந்தை ஒடிஷா மாநிலத்தின் கெந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள குழந்தையில்லா தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எனினும், குழந்தையை விற்பனை செய்ய மருத்துவமனை ஊழியர் கட்டாயப்படுத்தியதாக குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். பிறந்த குழந்தையின் தந்தையான நிராக்கர் மோஹரன்னா இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ethiri.com

இவர் அளித்துள்ள புகாரில் தனியார் மருத்துவமனை ஊழியர் குழந்தையை விற்று கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.

ரிஹாகதா கிராமத்தில் வசித்து வரும் மோஹரன்னா மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர், குழந்தை பெற்றுக் கொள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றனர். எனினும் ASHA எனும் அமைப்பை சேர்ந்த பணியாளர் தனியார் மருத்துவமனையில் கீதாஞ்சலியை அனுமதிக்க உதவியுள்ளார்.

சிறப்பான மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக் கொண்ட மோஹரன்னா – கீதாஞ்சலி தம்பதியினருக்கு ஆகஸ்டு 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் மருத்துவ செலவுகளுக்கான கட்டணமாக ரூ.7,500 செலுத்த மருத்துவமனை நிர்வாகம் மோஹரன்னாவிடம் கேட்கப்பட்டது.

மேலும் கட்டணம் செலுத்தாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரி ஏற்பாடு செய்த குழந்தையில்லாத தம்பதியினரிடம் குழந்தையை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என மோஹரன்னா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதற்கட்டமாக குழந்தையை மீட்டு அதன் பின் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக வழக்கு விசாரணை மேற்கொண்டு வரும் காவல் அதிகாரி பிஜோய் குமார் பிஷி தெரிவித்துள்ளார்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post