ethiri.com

ஏன் என்னை தண்டித்தாய் …?

நித்தம் நினைவில் நீ இருந்து
நித்தம் நித்தம் துரத்தையிலே …
செத்து செத்து பிழைக்கிறேன்
சிவந்து மனது தவிக்கிறதே ……

கட்டி வைத்த ஆசைகளை
கடத்தி சென்று விற்றவளே
பொத்தி வளர்த்த உன்னை யான்
பொறுமை இழந்து எறிவேனோ…?

நித்தம் நீயும் நச்சரிக்க
நினைவில் இங்கே வலிக்கிறது
கச்சையோடு நடந்தாலும்
கடைசி வரை உன்னை வீசேன் யான் …..

உள்ளம் உள்ளே நீ உறங்க
உன்னை யானும் மறப்பேனோ ..?
கேலி கிண்டல் புரிந்தாலும்
கேளடி கண்ணே மறவேனே ….

தீயுடல் தின்னும் வேளை வரை
தீங்கிட மாட்டேன் என் அன்பே
ஆயூள் சிறையில் என்னை அடைத்து
அன்பே ஏனோ வதம் செய்தாய் …?
( T )

வன்னி மைந்தன் -(ஜெகன் -)
01/08/2017 

Related Post