ethiri.com

சர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

சர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பொதுநலவாய அலுவலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் பரோனீஸ் அன்லி பிசி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்

ethiri.com

இக்கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தார்

மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதால் தமிழர்கள் பெரும் பாதிப்புகளிற்கு உள்ளாவதாகவும் குறித்த வெளிநாட்டு அமைச்சரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார்

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் ஜோன்ஸ் டய்யூறிஸ் தலைமையில் யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன்,த.குருகுலராசா.பா.சத்தியலிங்கம் ப.அடனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்’ 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post